தந்தையின் தொகுதியில் போட்டியிட பிரணாபின் மகன் அபிஜித் விருப்பம்
கொல்கத்தா: தனது தந்தையின் தொகுதியான ஜாங்கிபூரில் போட்டியிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 13வது குடியரசுத் தலைவராகியுள்ளார். இதையடுத்து அவர் வென்ற மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாங்கிபூர் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது.
இந்நிலையில் ஜாங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜியின் மகனும், பிர்பாம் மாவட்டத்தில் உள்ள நல்ஹாட்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் பெஹ்ராம்பூர் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து சவுத்ரி கூறுகையில்,
அபிஜித் ஜாங்கிபூரில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளாக பிரணாப் தான் அந்த தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார். ஆனால் அபிஜித் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். ஜாங்கிபூர் மக்களின் முன்னேற்றத்திற்காக பிரணாப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதை அத்தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள். அப்படி இருக்கையில் அங்கு பிரணாபின் மகன் போட்டியிடுவது காங்கிரஸுக்கு நல்லது தான்.
அவ்வாறு அபிஜித் போட்டியிட்டால் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியின் ஆதரவின்றி அவர் வெற்றி பெறுவார் என்றார்.












Click it and Unblock the Notifications