பிரச்சனைகள் குறித்து தேசியவாத காங்கிரசுடன் விவாதிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது: பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலக நேரிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கெடுவும் விதித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். அரசியலில் விட்டுக்கொடுத்துப் போவது என்பது இயல்பானது என்றார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications