69 ஏக்கர் நில முறைகேடு: எதியூரப்பா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
பெங்களூர்: 69 ஏக்கர் நில விடுவிப்பில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் கர்நாடகா முதல்வர் கர்நாடகா எதியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்ய லோக்ஆயுக்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள ஹூனசஸிகட்டே கிராமத்தை சேர்ந்த எஸ்.ஜே.மத்தியாஸ் என்பவரின் 69 ஏக்கர் நிலத்தை முறைகேடான முறையில் விடுவிக்கப்பட்டது.
இந்த நிலத்தை முன்னாள் கர்நாடகா முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது உறவினர்களான பி.கே.சோமசேகர், அதிலக்ஷ்மியம்மா, பி.எஸ்.உமாதேவி, எம்.கே.ராதாமணி மற்றும் மஞ்சுநாத் ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத், லோக்ஆயுக்தவில் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கே. சுதிந்திரராவ், புகார் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் புகார் குறித்து வழக்கு பதிவு செய்த தொகுப்பின் நகலை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த புகார் மீதான விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications