ஹசாரே குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: ஊழலில் தொடர்புடைய 15 மத்திய அமைச்சர்கள் மீது உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியின் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் ராஜ்காட் சென்று காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அன்னா ஹசாரே குழுவினர் ஜந்தர்மந்தரில் உள்ள உண்ணாவிரத திடலுக்கு வந்தனர். அங்கு அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, கோபால்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தின் போது மேடையில் ஹசாரே அமர்ந்திருந்தாலும் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. வரும் 29-ந் தேதியன்று அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்.

வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும், ஊழலில் தொடர்புடைய 15 அமைச்சர்களுக்கு எதிராக சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அன்னா ஹசாரே குழுவின் கோரிக்கைகள். மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் 162 மக்களவை எம்.பிக்கள், 39 மாநிலங்களவை எம்.பிக்கள் மீது விசாரணை நடத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் மட்டுமல்லாமல் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஹசாரே குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+