இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் ஒருவர் பலி
சுமத்ரா: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்குள்ளவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 6.6 ரிக்டர் அளவு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி பூகம்பங்களும், நிலநடுக்கங்களும் ஏற்பட்டுவருகின்றன. இன்று காலையில் வடக்கு சுமத்ரா தீவில் உள்ள சைமேலு தீவின் கடற்கரை பகுதியில் இன்று காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். பெரும்பாலோனோர் பீதியுடன் தெருக்களில் ஓடியதால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தினர் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அங்கு 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கடல் அலைகளின் உயரம் அதிகரித்தது உயர்ந்தது. இருப்பினும் கடல்நீர் நகருக்குள் வரவில்லை என்பதால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஒரு சில நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications