அசாம் பற்றி எரியவில்லை... இன்னும் இரண்டு நாளில் நிலைமை சரியாகிவிடும்: முதல்வர் தருண் கோகய்
Subscribe to Oneindia Tamil

ஒருவார காலமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தருண் கோகய், முகாம்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாம் பற்றி எரிவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றார்.
மேலும் வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ6 லட்சம் நிதி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் வீடிழந்தோருக்கு அரசு செலவில் சொந்த வீடு கட்டித்தரப்படும் என்றும் கோகய் உறுதியளித்துள்ளார்.
அசாமில் வன்முறையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் நாளை மறுநாள் பார்வையிடக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications