ராகுலை பார்லி. கட்சித் தலைவராக்கினா மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்: காங்.எம்பிக்கள் கடிதம்
Subscribe to Oneindia Tamil

கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பு வகிக்க தாம் தயார் என்று அண்மையில் ராகுல்காந்தி கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு என்ன பதவி? என்ன அமைச்சர்? என்ர ஆரூடங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பிக்கள் 10 பேர் ஒன்றாக சேர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், நாடாளுமன்ற மக்களவை கட்சித் தலைவர் பதவியை ராகுலுக்கு வழங்க வேண்டும். நம் முன் உள்ள சவால்களை முறியடித்துவிடுவார்.. நாட்டின் 50 விழுக்காடு மக்கள் துடிப்பான தலைவரையே எதிர்பார்க்கின்றனர். நிச்சயம் ராகுலை அந்தப் பதவியில் நியமித்தால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications