உதட்டில் ஏற்பட்ட பருவை அகற்ற டாக்டரிடம் போன பெண் பரிதாப சாவு
சென்னை: உதட்டில் இருந்த பருவை அகற்றுவதற்காக டாக்டரிடம் போன பெண், டாக்டர் இரண்டு ஊசி போட்டவுடன் மரணமடைந்தார். இதனால் டாக்டரைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அன்னை கிளினிக் என்ற பெயரில் டாக்டர் பாலாஜி என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அங்கு நேற்று இரவு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரது உதட்டில் பரு இருந்துள்ளது. இதை சரி செய்வதற்காக அவர் கிளினிக்குக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு டாக்டர் பாலாஜி, அப்பெண்ணுக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு டாக்டர் கூறியுள்ளார். பதறிப் போன உறவினர்கள் அருகில் இருந்த இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். டாக்டர் பாலாஜி போட்ட ஊசியாலதான் தங்களது உறவுப் பெண் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டி கிளினிக் முன்பு போராட்டத்தில் குதித்தனர். இறந்த பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications