அசாம் இனவன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 58: முதல்வர் தருண் கோகாய்க்கு நெருக்கடி?
கோக்ரஜார்:அசாமில் கோக்ரஜார்,சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையேயான வன்முறை தொடந்தும் நீடித்து வருகிறது. சிராங் மாவட்டத்தில் மேலும் 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒருவார காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில் நேற்றுதான் வன்முறை பாதித்த இடங்களை அசாம் முதல்வர் தருண் கோகாய் பார்வையிட்டார். இது அனைத்துக் கட்சியினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் தருண் கோகாய் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே காங்கிரஸ் கட்சி 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை தற்போது அசாமில் உருவாக்கியிருக்கிறது.
சில காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிப்படையாகவே கோகாயை விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ரஹ்மான் கான் கூறுகையில், தருண் கோகாயை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தனை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான மறுவாழ்வு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் மாநில முதல்வர் நேற்றுதான் சம்பவ இடங்களையே பார்வையிட்டிருக்கிறார் என்று கடிந்திருக்கிறார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் அவர் புகார் கூறியுள்ளார்.
கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வரும் வன்முறையில் மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேர் அகதிகளாக 400க்கும் மேற்பட்ட கிராமங்களைவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் மேற்குவங்க மாநிலத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒருவார காலமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்டும் வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications