For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: சிவலிஙகத்தின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் ஒரு முட்டாள் வாலிபர். அவரது பெயர் லக்ஷ்மண் ஜான்சன். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 12க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருப்பதியைச் சேர்ந்த லக்ஷ்மண் ஜான்சன் தற்போது தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். அவர் அண்மையில் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார். இந்நிலையில் அவர் இந்து கடவுளான சிவலிங்கத்தின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் கொதித்தெழுந்துவிட்டனர்.

இதையடுத்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் 12க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே மும்பையில் உள்ள அவரது வீட்டை சிவசேனா கட்சியினர் எரித்துவிட்டதாகவும், அவர் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் தனது பேஸ்புக் புரொபைலில் தான் மத்திய ரயில்வே பார்சல் குத்தகைக்காரராக உள்ளதாகவும், மேற்கத்திய நாடுகளில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேஸ்புக் புரொபைலே பொய்யானது என்று கருதப்படுகிறது.

English summary
More than 12 cases have been registered against Laxman Johnson who posted a photo of him standing atop a Shiv lingam on Facebook recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X