டாய்லெட் கதவுக்கு பதில் ரயில் கதவைத் திறந்த முதியவர் கீழே விழுந்து பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்த முதியவர் கழிவறைக் கதவுக்கு பதில் ரயிலின் கதவை திறந்தபோது கீழே விழுந்து பலியானார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஜனர்த்தனன் (76). அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் ஆந்திர மாநிலம் ராமகுண்டத்தில் வசித்து வருகிறார். உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனார்த்தனன் மகள் வீட்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றார். இதற்கிடையே அவரது மகனும் அவரைப் பார்க்க ஆந்திரா சென்றார்.

ஓரளவு உடல் நலம் தேறியதால் ஜனார்த்தனன் மகனுடன் சென்னைக்கு புறப்பட்டார். அவர்களுடன் அவரின் மகளும் வந்தார். அந்த மூவரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு ரயில் பேசின்பிரிட்ஜ் அருகே சென்று கொண்டிருக்கையில் ஜனார்த்தனன் கழிவறைக்கு சென்றார்.

அவர் கழிவறை கதவு என்று நினைத்து ரயிலின் கதவைத் திறந்தார். அப்போது ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்ததால் அவர் நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். வெகுநேரமாகியும் தந்தையைக் காணாமல் அவரது மகனும், மகளும் கழிவறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து அவர்கள் சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தவர் ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஜனார்த்தனின் மகனும், மகளும் வந்து பார்த்து இறந்த முதியவர் தங்கள் தந்தை தான் என்று அடையாளம் காட்டினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+