திரிபாதி தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்ட்பு வழக்கு: முன்னாள் டிஜிபி நடராஜன் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் தலைமை செயலாளர் திரிபாதியுடன் கூடுதல் டி.ஜி.பி. உபாத்தியாயாவின் தொலைபேசி உரையாடல் சி.டி. வெளியான வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. கே.நடராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் இயக்குனர் உபாத்தியாயாவும், முன்னாள் தலைமை செயலாளர் திரிபாதியும் பேசிய உரையாடல் சி.டி 2008ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் உபாத்தியாயாவும், முன்னாள் அமைச்சர் பூங்கோதையும் பேசிய தொலைபேசி உரையாடல் சி.டி. வெளியானது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஊழல் தடுப்புப் பிரிவில் சிறப்பு உதவியாளராக வேலை பார்த்த சங்கர் என்பவரை கைது செய்தனர். அவர்தான் சிடியை வெளியிட்டதாக குற்றம்சாட்டி குற்றப்பப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சங்கர்தான் பரபரப்பான சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் முன்னாள் டிஜிபி நடராஜன் ஆஜராகி, சி.டி. வெளியானது குறித்து சங்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டனர். ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டின் முகாந்திரம் ஆகியவைகளை பரிசீலித்து, வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கினேன் என்றார் அவர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று ஜுலை 31-ந் தேதிக்கு (இன்று) விசாரணைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+