மனைவியின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் தூக்கில் தொங்கிய கணவர்
நெல்லை: பாவூர்சத்திரம் அருகே மனைவியின் மருத்துவ செலவுக்கு பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். கூலித் தொழிலாளி. அவரது மனைவி சாந்தி. அவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சிவன்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி்க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சாந்திக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவன்ராஜ் சேர்த்தார்.
ஆனால் சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரிடம் பணமில்லை. இதையடுத்து மனைவியின் மருத்துவ செலவுக்காக உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் கேட்டார். ஆனால் யாரும் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீ்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications