டைகர் உட்ஸின் மனைவிக்கு கிடைத்தார் புதுக் காதலன்!

டைகர் உட்ஸைப் பிரிந்து வந்த பின்னர் அவர் தொழிலதிபர் ஜேமி டிங்மேனுடன் புது நட்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் இருவரும் பிரிந்தனர். அதே வேகத்தில் தற்போது ஐஸ் ஹாக்கி வீரரிடம் போய்விட்டார் எலின் என்பது குறிப்பிடத்தக்கது.
படு அழகான தோற்றத்தையும், உடல் வாகையும் கொண்டவர் எலின். இதனால் டைகர் உட்ஸை விட்டு அவர் பிரிந்ததுமே பலரும் அவருடன் நட்பு வைத்துக் கொள்ள முண்டியடித்தனர். இருப்பினும் உட்ஸைப் போல அவசரப்பட்டு ஒரே நேரத்தில் பலருடன் நட்பு வைத்துக் கொள்ளாமல் ஒவ்வொருவராக செலக்ட் செய்து நட்பை ஏற்படுத்தி வருகிறார் எலின் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது அவர் தேர்வு செய்துள்ள டக்ளஸ் குறித்து பலரும் ஏமாற்றம் தெரிவிக்கின்றனர். எலின் எவ்ளோ அழகு, அவருக்குப் போய் இந்த குண்டு மூஞ்சி டக்ளஸா என்று கேலி செய்கிறார்களாம். ஆனால் எலின் அதைப் பொருட்படுத்தவில்லையாம்.
2 குழந்தைகளுக்குத் தாயான எலினும், டக்ளஸும் கடந்த வாரம் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரு நைட் கிளப்புக்குப் போனபோது பலரும் அவர்களை நெருக்கத்தில் பார்த்து வியந்து போனார்களாம். இருவரும் கட்டிப்பிடித்தபடியும், நெருக்கமாக உட்கார்ந்த நிலையிலும் காணப்பட்டார்களாம்.
அங்கு ஸ்வீடன் கோல்ப் வீரர் ஜெஸ்பர் பெர்ன்விக்குடன் இணைந்து டின்னர் சாப்பிட்டார்களாம்.
மூஞ்சிதான் குப்பையாக இருந்தாலும், டக்ளஸ் செம உயரமானவர். 6 அடி 3 அங்குலம் உயரமான அவர் சான்ஜோஸ் ஷார்க்ஸ் அணிக்காக ஐஸ் ஹாக்கி ஆடி வருகிறார். இவருக்கும், எலினுக்கும் 32 வயதுதான்.
டைகர் உட்ஸுடன் 5 வருடம் குடும்பம் நடத்தியவர் எலின். ஆனால் 2009ம் ஆண்டு பல்வேறு பெண்களுடன் டைகர் உட்ஸுக்கு தொடர்பு இருப்பது அடுத்தடுத்து அம்பலமானதால் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார்.
உட்ஸைப் பிரிந்த கையோடு அடுத்தடுத்து 2 முறை புதிய காதலரைத் தேடிக் கொண்டார் எலின் என்றாலும் கூட டைகர் உட்ஸ் இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications