ஒடிஷாவில் 5 அமைச்சர்கள் நீக்கம்- புதிய அமைச்சர்களாக 9 பேர் இன்று பொறுப்ப்பேற்றனர்
புவனேஸ்வர்: ஒடிஷாவில் அமைச்சரவையில் 5 பேரை நீக்கிவிட்டு 9 பேரை புதிய அமைச்சர்களாக நியமனம் செய்திருக்கிறார் முதல்வர் நவீன்பட்நாயக். அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக 5 அமைச்சர்களையும் ராஜினாமா செய்யவும் நவீன்பட்நாயக் கட்டளையிட்டிருந்தார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில், தாமோதர் ராட், பிஜய்ஸ்ரீ ரவுத்ரி, கல்பதரு தாஸ் ஆகிய மூவரும் கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இவர்களைத் தொடர்ந்து பிரதாப் கேசரி தேவ், சரோஜினி ஹெம்ப்ராம், ரபி நாரயண் நந்தா, அருண் சாகு, ரஜினிகாந்த்சிங், சுப்ரதா தராய் ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
நிதியமைச்சர் பிரபுல்லா கடாய், சுற்றுலா அமைச்சர் சமால், மின்துறை அமைச்சர் அட்டனு சபியாச்ச்சி நாயக், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் புஷ்பேந்திரா சிங்தேவ் மற்றும் கல்வியமைச்சர் பிரதாப் ஜேனா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications