அடப்பாவமே, ஒரு ஆம்பளைக்கு இப்படியெல்லாமா சோதனை வருவது...!

Subscribe to Oneindia Tamil

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் ஜோனா பால்கன் பெரும் சோதனையைச் சந்தித்து விட்டார். அவருக்கு ரொம்ப 'ஷேம்' ஆகி விட்டது.

அப்படி என்னதான் நடந்தது....?

ஜோனா பால்கன் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பார்த்து சந்தேகமடைந்தனர். காரணம் அவரது ஆண்குறி இருந்த பகுதியில் பேன்ட் சற்று புடைப்பாக, பெரிதாக இருந்ததால். இதையடுத்து அவரை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனைக்காக கூட்டிச் சென்றனர்.

அவர் தனது பேன்ட்டுக்குள் வெடிபொருள் எதையேனும் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வந்தது. இதையடுத்து வெடிபொருள் இருக்கிறதா என்று வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியை வைத்து சோதனையிட்டனர். தடயவியல் சோதனைக்காக பவுடரையும் கூட தூவினர்.

நாலாபுறமும் அதிகாரிகள் சுற்றி நின்று சோதனையிட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த 41 வயதான பால்கன், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அதிகாரிகளே சற்று பொறுங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன் என்று கூறி உண்மையை அவிழ்த்து விட்டார். அதைக் கேட்டு அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை...

அப்படி என்னதான் சொன்னார் பால்கன்?

பால்கனுக்கு ஆண் குறி வழக்கமாக இருப்பதை விட நீளமானதாம். அதாவது சாதாரண நிலையில், 9 இன்ச்சுகளாம். அதுவே விரிவடைந்தால் 13.5 இன்ச் அளவுக்கு நீண்டு விடுமாம்.

இவருடைய ஆண்குறிதான் உலகிலேயே மிக நீளமானதாக கருதப்படுகிறது. இது குறித்து 1999ம் ஆண்டு ஒரு டிவியில் டாக்குமென்ட்டரியெல்லாம் கூட போட்டுள்ளனராம். இதைக் கேட்ட அதிகாரிகள், அடடா, தப்பா நினைச்சு சந்தேகப்பட்டுட்டோமே என்று சங்கடமாககக் கூறினராம்.

இருந்தாலும் தப்பு தன் மீதுதான் என்று அதிகாரிகளிடம் கூறிய பால்கன், இனிமேல் வெளியே போகும்போது இறுக்கமான பேன்ட் போடாமல், பெரிய தொள தொள டிரவுசர் போட்டுக் கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் கூறி விட்டு நடந்து போனாராம்.

எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+