For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்-ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

Google Oneindia Tamil News

Pramod Mutalik
பெங்களூர்: இலங்கையில் 40 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அடிப்பை உரிமை கூட இல்லாமல் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையை ஏற்படுத்திய இலங்கை ராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது. அங்கு 40 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், அடிமைகள் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்திற்கு பெங்களூரில் பயிற்சி தருவது சரியான முடிவல்லை. இந்த பயிற்சி என்பது ஒரு திட்டமிட்ட சதியாகும். இந்த பயிற்சியை எப்படி இந்திய அரசு தரலாம். இது நியாயமற்ற செயல்.

இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் தர மக்களைப் போல நடத்தப்படுகிறார்கள். இதுவரை அங்கு ஏழரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்தச் சூழ்நிலையில் இலங்கை ராணுவத்தினருக்கு பெங்களூரில் பயிற்சி தருவதை எதிர்த்து எலஹங்கா விமானப்படை நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். அது உறுதி, 100 சதவீதம் உறுதி. போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் முத்தலிக்.

English summary
Sri Ram Sene has threatened to stage a protest on the on-going training programme for military armed forces from Sri Lanka at Yelahanka Air Force station. The protest will be held in front of the Air Force station soon, Pramod Mutalik, founder-president, Sri Ram Sene said. He said, “When 40 lakh Tamils in Sri Lanka have been denied basic rights, the Union government has agreed to provide training to the Sri Lankan army. The Sri Lankan Tamilians were treated like third class citizens. More than 7.5 lakh Tamils have been killed.” Terming this training an ‘organised conspiracy’, Mutalik questioned how was the training programme was justified? Union government has no specific stand on the issue, he opined.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X