எஸ்.ஐ லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
மதுரை: சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சியை வீடியோ எடுத்து சிடியில் பதிவு செய்து, அந்த சிடியை ஆதாரமாக வைத்து, எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் தொடர்ந்துள்ளார்.
குமரி மாவட்டம், தென்தாமரைக்குளத்தை சேர்ந்தவர் ஜான்தேவசிங். இவரை ஒரு வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை கொடுத்த அவர், அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த சிடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ஜான்தேவசிங், மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மனைவியிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அந்த முன்விரோதத்தில் என் மீது மாசாணமுத்து என்பவர் தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் அளித்தார்.
அந்த புகாரை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, என் மீது சாதாரண வழக்கு பதிவு செய்து விட்டு விடுவதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். லஞ்சம் கொடுக்காவிட்டால், பெரிய குற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டினார்.
கடந்த 12.5.2012 அன்று என்னை கட்டாயப்படுத்தி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வாங்கினார். அந்த பணத்தை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகத்திடம் கொடுத்தார். மறுநாள் மேலும் ரூ.2 ஆயிரம் கொடுக்கும்படி சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி கேட்டார். அதையும் கொடுத்தேன். அதன்பின்பும் ரூ.2 ஆயிரம் கேட்டு தொந்தரவு கொடுத்தார்.
கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் பொய் வழக்குப்பதிவு செய்வோம் என்று சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் மிரட்டி வருகின்றனர். 12.5.2012 அன்று என்னிடம் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, லஞ்சம் வாங்கியதை விலை உயர்ந்த கேமரா மூலம் போலீசாருக்கு தெரியாமல் என்னுடன் வந்திருந்தவர் வீடியோ படம் பிடித்தார். அதை சி.டியில் பதிவு செய்தேன்.
அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சி.டியுடன் போலீஸ் டி.ஜி.பி. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு அனுப்பினேன்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி பணத்தை வாங்குவது போன்றும், அதை எண்ணி பார்ப்பது போன்றும், அதன்பின்பு பணத்தை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போன்றும் உள்ள வீடியோ மற்றும் உரையாடலுடன் கூடிய சி.டியையும் நீதிபதியிடம், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜார்ஜ்பால் ஆண்டோ சமர்ப்பித்தார். அதை பார்த்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
லஞ்ச புகாரில் சிக்கியுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, நாகர்கோவில் ஆயுதப்படைக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகம் தூத்துக்குடி போலீஸ் நிலையத்துக்கும் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications