For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்

By Mathi
Google Oneindia Tamil News

Trai
டெல்லி: டெலி மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களால் உங்கள் செல்போனின் இன்பாக்ஸ் நிறைந்து போய் சலிப்படைந்துவிடுகிறவரா நீங்கள்?.. உங்கள் கவலைக்கு முடிவுகட்ட தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

பதிவுசெய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் தொடர்ந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்வதாக புகார் வந்தால் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். இப்படியே 10 முறை அபராதம் விதிக்கப்பட்டால் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் செல்போன் சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுவிடும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல் உங்களுக்கு வரும் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். பற்றிய தகவல்களை 1909 என்ற எண்ணுக்கு பார்வார்டு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இணையதளம் வழியாக மின்னஞ்சல் மூலமாக புகார் செய்தாலும் இத்தகைய எஸ்.எம்.எஸ். அனுப்பும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸிஸ் ஆகியவை பல்க் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஏராளமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். இத்தகைய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 10 இலக்க எண்களையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Tired of pesky text messages? Forwarding it to a designated number is all it will take to initiate action against the telemarketer, according to a proposal by the telecom regulator on Friday, which included a hefty penalty on unregistered telemarketers as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X