ஓவர்நைட்டில் கிங்மேக்கரான அதானி.. பங்குச்சந்தையில் தரமான சம்பவம்!
மும்பை: அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது அமெரிக்க நீதித்துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் அதானி குழுமம் பெரும் தொகையை கொடுத்து அனைத்து வழக்குகளையும் முடிக்கும் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைத்தது.
இதன் வாயிலாக இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் திங்கட்கிழமை இரவு அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுக்கள் மொத்தமாக கிளீன் செய்யப்பட்டு உள்ளது. இந்த முக்கிய முடிவு அதானி குழுமத்துக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதனால் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிரடியாக உயர்ந்தன.

அமெரிக்க நீதித்துறையின் முடிவு
அமெரிக்க நீதித்துறை (US Department of Justice) கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரந்தரமாக வாபஸ் பெற்றுள்ளது. இந்த முடிவு கடந்த சில நாட்களில் அதானி குழுமத்துக்கு தொடர்ந்து வந்த குட்நியூஸில் முக்கியமானது. இதற்கு முன்பு அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEC) மற்றும் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் தீர்வு கண்டிருந்தது.
முந்தைய தீர்வுகள்
கடந்த வாரம் SEC-யுடன் சோலார் எனர்ஜி திட்டங்கள் தொடர்பான வழக்கில் கௌதம் அதானி 6 மில்லியன் டாலரும், சாகர் அதானி 12 மில்லியன் டாலரும் செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டனர். அதன் பிறகு ஈரான் மீதான அமெரிக்க தடை மீறல் வழக்கில் அதானி குழுமம் 275 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தி தீர்வு கண்டது. இந்த இரு வழக்குகளும் முடிவுக்கு வந்த நிலையில், இப்போது அதானி குழுமம்ம மீதான அனைத்து குற்றவியல் வழக்கும் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் ரியாக்ஷன்
அமெரிக்க மண்ணில் அதானி குழுமத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் காலை வர்த்தகத்தில் உயர்ந்தன. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் அதானி குழுமம் இனி அமெரிக்க சந்தையில் திட்டமிட்டு இருந்த முதலீடுகளும், விரிவாக்க திட்டங்களும் கொண்டு அமெரிக்க நிதி சந்தைக்கு சுதந்திரமாக வரலாம்.
அதானி கிரீன் எனர்ஜி - 3 சதவீத உயர்வு (ரூ.1,410.10)
அதானி என்டர்பிரைசஸ் - 2.26 சதவீத உயர்வு (ரூ.2,750.60)
அதானி டோட்டல் கேஸ் - 2.06 சதவீத உயர்வு (ரூ.622.65)
அதானி பவர் - 0.27 சதவீத உயர்வு (ரூ.219.90)
அதானி போர்ட்ஸ் - 0.26 சதவீத உயர்வு (ரூ.1,792.30)
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் - 0.73 சதவீத உயர்வு (ரூ.1337.95)
இந்த வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முடிவின் மூலம் அதானி குழுமத்தின் மீதான அமெரிக்க சட்ட ரீதியான சிக்கல்கள் மொத்தமாக குறைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழுமம் பல்வேறு சர்வதேச சவால்களை எதிர்கொண்ட நிலையில், இந்தத் வழக்கின் முடிவு நிறுவனத்துக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. முதலீட்டாளர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம், இனி தனது திட்டங்களை முழு வேகத்துடன் செயல்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சந்தை வல்லுநர்கள் இந்த முடிவு அதானி பங்குகளின் நீண்டகால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications