இன்போசிஸ் ஊழியை மரணம்: விடுப்பில் இருந்தவர் எதற்காக அலுவலகம் சென்றார்?

நீலிமா யெருவா (27) என்ற இன்போசிஸ் ஊழியர் கடந்த 2ம் ஹைதராபாத் கச்சிபெளலி பகுதியில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்ததையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது. அமெரிக்காவில் பணிக்காக சென்ற நீலிமா கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தான் ஹைதராபாத் திரும்பியுள்ளார். 3 வார விடுப்பில் இந்தியா வந்த அவர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இருக்கையில் அவர் எதற்காக கடந்த 2ம் தேதி அதுவும் இரவு 8.40 மணிக்கு அலுவலகத்திற்கு சென்றார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு பணிபுரியும் தனது பழைய நண்பர்கள், சகாக்களை சந்திக்கவில்லை. அவர் பிளாக் 18க்குள் நுழைந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பிளாக்கில் நடக்கும் புராஜெக்டுக்கும் நீலிமாவுக்கும் சம்பந்தமே இல்லை என்று அவருடன் பணிபுரிந்தவர்கள் தெரிவித்தனர். காரில் வராத அவர் எதற்காக கார் பார்க்கிங் இடத்திற்கு சென்றார் என்பது யாருக்குமே புரியவில்லை.
நீலிமா பற்றி அவருடன் பணியாற்றிய ஒருவர் கூறுகையில்,
நீலிமா மிகவும் தைரியமானவர். தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர். அவர் பல பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். அவரது அணியிலேயே அவர் தான் மிகவும் புத்திசாலி. அப்படிபட்டவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நீலிமா சுரேஷ் ரெட்டியை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வரும் 17ம் தேதி அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என்றார்.
நீலிமா அமெரிக்காவில் டம்பாவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் தான் பணிபுரிந்தார். அவரது தற்கொலை குறித்து கேள்விப்பட்ட சகாக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நீலிமாவின் மரணம் குறித்து எதையும் கணிக்க வேண்டாம் என்று இன்போசிஸ் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இமெயில் அனுப்பியுள்ளது.
நீலிமாவின் உடலைப் பார்த்தவுடனேயே அவரது குடும்பத்தாரை தொடர்பு கொள்ள இன்போசிஸ் நிர்வாகம் முயன்றுள்ளது. ஆனால் அவர் இறந்து பல மணிநேரம் கழித்து தான் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று நீலிமாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். நீலிமா இறந்தவுடன் இன்போசிஸ் நிர்வாகம் அவரது குடும்பத்தாருக்கு பல முறை போன் செய்துள்ளது. அவரது உறவினருக்கு ஃபேஸ்புக் மூலம் கூட தகவல் தெரிவித்துள்ளது. இறுதியாக நீலிமாவின் கணவரை அதிகாலை 2.55 மணிக்கு தான் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. இதையடுத்து அதிகாலை 3.01 மணிக்கு நீலிமாவின் அம்மாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்போசிஸ் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications