ரூபாய் நோட்டை கீழே போட்டு கொள்ளையடிக்கும் திருச்சி கும்பல் கேரளாவில் கைது: மேலும் 4 பேருக்கு வலை
திருவனந்தபுரம்: காரில் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் திருச்சி கும்பலைச் சேர்ந்த 4 பேரை திருச்சூர் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ மேத்யூ. அவர் கடந்த 28ம் தேதி செட்டியங்காடு பகுதி சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு சில பொருட்கள் வாங்கியுள்ளார். திரும்பி வந்து காரை திறந்து பொருட்களை வைத்தபோது கீழே ரூபாய் நோட்டு கிடப்பதாக வாலிபர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பணத்தை மேத்யூ வேகமாகச் சென்று எடுத்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த ரூ.52,000 ரொக்கம் இருந்த பை, லேப்டாப், கேமரா போன்ற பொருட்களை காணவில்லை.
இது குறித்து திருச்சூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த முத்துகுமார், ஆறுமுகம், பாலமுருகன், மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 8 பேர் அடங்கிய கும்பலாக பல இடங்களுக்கு சென்று கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். பழனியில் அறை எடுத்து தங்கும் அவர்கள் அங்கிருந்து பேருந்தில் கேரளா செல்வர். பின்னர் 4 பேர் கொண்ட குழுவாக பிரிந்து கொள்ளையில் ஈடுபடுவர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications