மு.க.ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிர் ஜெகன், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த 2ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில், காலராவை தடுக்க தி.மு.க. தொண்டர்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர் என்று பொருள்படும்படி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில், சென்னை மாநகரம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த வேளையில், முதல்வர் எப்படி விடுமுறையில் இருக்க முடியும்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசியது முற்றிலும் பொய்யானது, அவதூறானது, அடிப்படை ஆதாரமற்றது.
சென்னை நகரம் முழுவதும் காலராவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மு.க. ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசியதை, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலினும், அவரது பேச்சை பிரசுரித்த பத்திரிகையும் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளனர். எம்.எல்.ஏவாக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வரின் செயல்பாடுகள் நன்றாக தெரியும். அது தெரிந்திருந்தும், அவர் உள்நோக்கத்துடன் பேசியதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. எனவே மு.க. ஸ்டாலினையும், அவரது பேச்சை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர், ஆகியோரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதே போல தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீதும் அவரது செய்தியை வெளியிட்ட இந்து பத்திரிக்கை மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications