சுதந்திர தினம்: சென்னை ஏர்போர்ட்டில் 7 அடுக்கு பாதுகாப்பு-பார்வையாளர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்றே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் விமான நிலைத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இன்று முதல் வரும் 20ம் தேதி வரை அமலில் இருக்கும். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கார் நிறுத்துமிடத்தில் தீவிர சோதனை நடந்து வருகிறது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். வரும் 14ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் வரும் 9,11 மற்றும் 13 ஆகிய 3 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதனால் நேப்பியர் பாலத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் தவிர சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மனநோயாளி ஒருவர் சென்ட்ரலில் உள்ள மணிக்கூண்டில் ஏறி போலீசாரை படாதபாடு படுத்தினார். பல மணிநேரம் போராடி பத்திரமாக மீட்கப்பட்ட அவர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரை பாடாய்படுத்தும் மனநோயாளிகளை கட்டுப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள ரயில்வே போலீசாருக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனை சுதந்திர தின நிகழ்ச்சிகள் முடியும் வரை நடத்தப்படும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications