1,000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை பயிற்சி சோதனை வெற்றி

Subscribe to Oneindia Tamil

Agni 2
பலசூர்: 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து அதை சோதித்து வருகின்றனர். இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.48 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி 2 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. இந்நிலையில் பயிற்சிக்காக அதை சோதனை செய்தததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. 17 டன் எடையுள்ள இது 1,000 கிலோ எடைகொண்ட அணு ஆயதங்களை தாங்கிச் சென்று 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாகத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி ரக ஏவுகணைகளில் 700 கிமீ சென்று இலக்கை தாக்கும் அக்னி 1, 3,000 கிமீ வரை சென்று தாக்கும் அக்னி 3, அக்னி 4 மற்றும் 5,000 கிமீ தூரம் வரை சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணைகள் அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+