சென்னை மெட்ரோ ரயில் கிரேன் விழுந்து ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் முறிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி அருகே பூமி்க்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க கிரேன் மூலம் பள்ளம் தோண்டி 75 அடி ஆழத்தில் தண்டவாளம் அமைக்கப்படுகிறது.
இந்த பணியின்போது மண் சரிந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு சுவர் எழுப்புகின்றனர். இந்த சுவர் கட்ட இரும்புக்கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 3 ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக நடந்து வரும் இந்த பணியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு குழுவினரும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை இன்னொரு குழுவினரும் பணியாற்றுகின்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு வந்தவர்கள் தங்கள் பணியை முடித்து வீடு திரும்ப 15 நிமிடங்கள் இருக்கும்போது அதாவது நேற்றிரவு 7.45 மணி அளவில் கான்கிரீட் போடும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட 60 அடி நீள ராட்சத கிரேனின் அடிப்பகுதி திடீர் என்று முறி்ந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிந்து(21) என்ற தொழிலாளர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பொறுப்பில் இருந்த மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விபத்தில் பலியான சிந்துவின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications