For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி தொடங்கும் உள்நோக்கத்துடன் உண்ணாவிரதம்: டெல்லியில் அன்னா ஹசாரே மீது சீட்டிங் கேஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Anna Hazare
டெல்லி: அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்தர்ஜித்சிங் பாட்டியா தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதற்காக அவருக்கு பொதுமக்கள் தார்மீக ஆதரவு கொடுத்தனர். அவரது போராட்டத்திலும் கலந்து கொண்டனர். ஆனால் அன்னாஹசாரேயும், அவரது குழுவினரும் மக்களை ஏமாற்றி விட்டனர். வலுவான லோக்பாலுக்கான போராட்டம் என்று கூறி மக்களை நம்ப வைத்து மோசடி செய்து விட்டனர். அவர்கள் அரசியல் கட்சி தொடங்க ஒரு அடிப்படை வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்த போராட்டத்துக்காக மக்களிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எந்த கணக்கும் காட்டவில்லை. அன்னாஹசாரே குழு திசை மாறி செல்வதற்கு யோகா குரு ராம்தேவும் காரணமாகி விட்டார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் சுமன் ஸ்ரீவஸ்தவா வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை 14-ந் நடைபெறும் என்று தெரிவித்தார்.

English summary
A complaint was filed in a local court on Thursday against social activist Anna Hazare and his team for allegedly "cheating the people in the name of launching an agitation" for a strong Lokpal Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X