தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம்: மக்கள் நிம்மதி பெருமூச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் பாய்லரில் ஏற்பட்ட பழுது நேற்று இரவோடு இரவாக சரி செய்யப்பட்டதால் மீண்டும் இன்று காலை உற்பத்தி தொடங்கியுளளது. இதனால் மீ்ன் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய மின் உற்பத்தி கேந்திரமாக விளங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 யூனிட்களில் இருந்து 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் இந்த அனல்மின் நிலையத்தில் 2 முறை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்தால் ஏற்பட்ட பழுது துரித கதியில் சரி செய்யப்பட்டதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களும் இயங்கி வந்த நிலையில் கடந்த 6ம் தேதியன்று பராமரிப்பு காரணமாக 2வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 210 யூனிட் மி்ன் உற்பத்தி குறைந்தது. வரும் 26ம் தேதி வரை இந்த யூனிட்டில் பராமரிப்பு பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 5,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் 3வது யூனிட்டில் உள்ள ராட்சத பாய்லரில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி முடங்கியது.
இதனால் மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள் மேற்பார்வையில் பாய்லரை பழுது பார்க்கும் பணி இரவு பகலாக நடந்தது. இன்று காலை பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதனால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications