நில அபகரிப்பு: கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் தம்பி வீட்டில் போலீஸ் ரெய்ட்!

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி மற்றும் மகள் மீதான நில அபகரிப்பு புகாரால் ஓய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சென்னையை விட்டு வெளியேறவும் துக்கையாண்டிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகள்கள் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளனர்.
இந்நிலையில் நீலாங்கரைஅருகே உள்ள பனையூர் " சீ ஷோர் டவுனில்" துக்கையாண்டி வீடு உள்ளது. போலீசார் அங்கு சென்ற போது, வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் அங்கு சோதனை நடத்த முடியாமல் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
துக்கையாண்டியின் தம்பி நாராயணசாமி பக்கத்து தெருவில் வசிக்கிறார். அவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். நாராயணசாமி சென்னை ஆயுதப்படை போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
அவரது மனைவி பாலசரஸ்வதி, துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியின் தங்கை ஆவார். சோதனை போட்டபோது, நாராயணசாமியும், பாலசரஸ்வதியும் வீட்டில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புகார் என்ன?
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள்கள் மீதான புகாராகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications