டெசோ மாநாட்டை அறிவாலயத்தில் நடத்தத் திட்டம்?
Subscribe to Oneindia Tamil

11 காரணங்களைக் கூறி டெசோ மாநாட்டுக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
இதனை எதிர்த்து தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது கோபாலாபுரம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். போலீஸ் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்சில் இன்று அப்பீல் செய்கிறது திமுக.
மாநாட்டுக்கு தடை விதித்து போலீஸ் கூறிய 11 காரணங்களுக்கும் அப்பீல் மனுவில் பதில் அளிக்கப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் மாநாட்டை நடத்தி முடிக்கவும் தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications