For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் கோரிக்கையை ஏற்காவிட்டால் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவேன்: ராம்தேவ்

By Mathi
Google Oneindia Tamil News

Baba Ramdev
டெல்லி: கறுப்பண மீட்பு, வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யொகா குரு பாபா ராம்தேவ் மத்திய அரசுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து உரிய பதில் கிடைக்காவிட்டால் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை பகிரங்கப்படுத்துவேன் என்று அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமையன்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கினார்.வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டும் என்பதுதான் ராம்தேவ் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளுக்கு தமக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் ஊழல்வாதிகளின் பெயர்களை பகிரங்கப்படுத்துவேன் என்று எச்சரித்திருக்கிறார்.

மேலும் ஊழல் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தமானவர் ஒருவர்தான் நாட்டின் மூவர்ண கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்ற வேண்டும். ஆனால் ஊழல்வாதிகளால் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்படுவது என்பது நமது கெளரவத்துக்கு இழுக்கானது என்றும் ராம்தேவ் கூறியுள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் லோக்பால் மசோதா தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு ஏதும் எடுக்காவிட்டால் நிச்சயமாக ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் ராம்தேவ் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

English summary
Ramdev's fast entered the third day on Saturday with the yoga guru threatening to intensify his agitation if his demands on blackmoney and Lokpal bill are not met by the deadline set by him. Ramdev had set a three-day ultimatum, which ends on Saturday evening, to the government to address the issues raised by him when he launched his three-day fast on Thursday at Ramlila Maidan in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X