திமுகவின் டெசோ மாநாட்டை புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முடிவு!
கொழும்பு: தமிழகத்தில் திமுகவின் ஏற்பாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் பங்கேற்பது இல்லை என்று இலங்கை தமிழர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நேற்று நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக மேற்கொண்ட நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டும் தமிழர்களின் படுகொலைகளின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய காங்கிரஸ் கூட்டணியில்தான் தி.மு.க இப்போதும் இருந்து வருவதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக் காட்டி இம்முடிவை மேற்கொண்டிருக்கிறது..
இலங்கையில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளாது என தனது முடிவை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications