கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதிப்பதா? வைகோ, சீமான் கண்டனம்

வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை ஆகும்.
கூடங்குளம் அணுஉலை குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடக்கும் வழக்குகளில், ஜப்பான் புகுஷிமா விபத்திற்கு பிந்தைய (இந்திய அணு உலைகள் பாதுகாப்பு குறித்த) வல்லுநர் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே, கூடங்குளம் அணு உலை செயல்படுத்தப்படும் என்று அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் எரிபொருள் நிரப்ப ஆணையம் அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சிக்குரியது..
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் முறையாக வகுக்கப்படவில்லை என்றும், பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தாத நிலையில் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அனுமதியானது நீதிமன்றத்தின் மாண்பையும் - நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதியியலின் சாராம்சமான 'வருமுன் காப்போம்' என்ற முக்கியக் கோட்பாட்டை முற்றிலுமாக புறந்தள்ளி விட்டு, கூடங்குளத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணு உலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதில் சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு, அதன் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை காத்திருந்து செயல்பட வேண்டிய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம், தன்னிச்சையாக முடிவு செய்து எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்துள்ளது நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் செயல் அல்ல. தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு, முறையற்ற வழியில் அணு உலையை செயல்பட வைக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications