மாணவனுடன் உறவு... சிக்கினார் அமெரிக்க ஆசிரியை!
டெக்ஸாஸ்: தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுடன் உறவு கொண்டதற்காக அமெரிக்காவில் ஒரு ஆசிரியையைக் கைது செய்துள்ளனர். அவருக்கு மேலும் ஒருவருடன் உறவு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ், உப்சர் கவுண்டிப் பகுதியில் உள்ளது ஹார்மோனி என்ற பள்ளி. இங்கு ஆசிரியையாக இருந்தவர் 35 வயதான ஜூடி லின் லாங்போர்ட். இவரது பிள்ளைகள் இருவரும் இங்குதான் படிக்கின்றனர்.
இவர் மீது கடந்த டிசம்பர் 1ம் தேதி பாலியல் புகார்கள் எழுந்தன. தனது பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவருடனும், ஒரு மாணவனின் ஸ்பான்சருடனும் அவர் உறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தான் வேலை பார்க்கும் பள்ளியிலும், வீட்டிலும் வைத்து அவர் உறவு கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையின் இறுதியில் அவரை சமீபத்தில் கைது செய்தனர் போலீஸார். இருப்பினும் 60,000 டாலர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications