மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி... இனி மும்பைக்கு டெய்லி பறக்கலாம்!
Subscribe to Oneindia Tamil

மதுரையிலிருந்து மும்பைக்கு தற்போது வாரத்தில் இரு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏர் இந்தியாவின் விமான சேவை இருந்து வருகிறது. இதனால் மற்ற நாட்களில் சென்னை போய் லிங்க் விமானத்தைப் பிடிக்க வேண்டியுள்ளது.
இந்த சேவையை தினசரி சேவையாக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பிலும், வர்த்தக அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று தற்போது தனது வாரம் இருமுறை சேவையை தினசரி சேவையாக ஏர் இந்தியா மாற்றியுள்ளது.
அதன்படி இனி இந்த விமானம் தினசரி பகல் 1.10 மணிக்கு மதுரை வரும். பின்னர் 3 மணிக்கு சென்னை வழியாக மும்பைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications