யூரோ மில்லியன் லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற இங்கிலாந்து தம்பதி

கடந்த 2004ம் ஆண்டு முதல் யூரோ மில்லியன் லாட்டரி குலுக்கல் ஐரோப்பா கண்டத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்தின் நேஷனல் லாட்டரி நிறுவனம் நடத்தும் இந்த குலுக்கலுக்கான டிக்கெட்டுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் விற்பகப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான லாட்டரி குலுக்கல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்தில் உள்ள சஃப்போக்கைச் சேர்ந்த தம்பதி ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40) ஆகியோருககு ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள டவுன் ஹால் கன்ட்ரி ஹவுஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் அவர்கள் தான் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஹேவர்ஹில்லில் பார்ட்னர்ஷிப் முறையில் மியூசிக் கடை வைத்துள்ளார் ஏட்ரியன். கில்லியன் கேம்ப்ரிட்ஜில் உள்ள ஆட்டன்ப்ரூக்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் சுகாதார உதவியாளராக உள்ளார். தற்போது லாட்டரி பணத்தை வைத்து என்ன செய்வது என்று அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சகல வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் கில்லியன் தனது கனவு காரான ஆடி க்யூ7 ஒன்றை வாங்கவிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications