நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க 170 இடங்களை குறி வைக்கும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

BJP leaders
டெல்லி: பாஜகவில் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி உள்பட தகுதியுடைய வேட்பாளர்கள் 6 பேர் உள்ளதாக அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதையடுத்து இந்த விஷயத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பாஜக அமைதி காத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போதே பாஜக தெரிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிபந்தனை விதித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இந் நிலையில் பாஜக தலைவர் நிதின் கட்காரி இந்தியா டுடேவின் டிவியான ஹெட்லைன்ஸ் டுடே சேனலுக்கு அளித்த பேட்டியில்,

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் முன்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அவருக்கு உறுதியளித்துள்ளேன்.

பாஜகவில் 6 பிரதம வேட்பாளர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒருவர். அதே போல மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.

ஆனால் இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நிதிஷ்குமார் அத்வானியை பிரதம வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறாரா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சியைச் சாராத ஒருவரே பிரதமர் ஆவார் என்ற அத்வானியின் கருத்தை நான் ஏற்கவில்லை. 2014ம் ஆண்டில் நிச்சயம் பாஜகவைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆவார்.

தேர்தலில் 170 இடங்களில் பாஜக வென்றுவிட்டால் போதும், கூட்டணிக் கட்சிகள் முழுமையாக பாஜகவை ஆதரித்துவிடும். இதனால் குறைந்தபட்சம் 170 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்காகும்.

எனக்கு மீண்டும் பாஜக தலைவர் பதவியைத் தர ஆர்எஸ்எஸ் தயாராக இல்லை என்ற கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. கட்சித் தலைவர் பதவி எனக்குக் கிடைக்கும் என நான் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், கிடைத்தது. மீண்டும் பதவி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. எனக்குக் கவலையில்லை என்றார் கட்காரி.

அதே நேரத்தில், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார கமிட்டியின் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்க நிதின் கட்காரி மறுத்துவிட்டார்.

இதன்மூலம் நரேந்திர மோடியை முன் வைத்தே பாஜக தனது பிரச்சாரத்தை நடத்தவுள்ளது தெளிவாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+