டீசல் விலையை உடனே உயர்த்த பிரதமருக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை
Subscribe to Oneindia Tamil

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பிரதமருக்கு சில முக்கியப் பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதில், டீசல் விலையை உயர்த்த வேண்டியது அவசியம், கட்டாயம். இதை ஒரு முறையோ அல்லது படிப்படியாகவோ உயர்த்தியாக வேண்டும்.
அதேபோல சிலிண்டர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2012-13ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் பணவீக்கம் 6.5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்றும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications