விழுப்புரத்தில் பரவும் டைபாய்டு: ஒரே பள்ளி 100 மாணவர்களுக்கு காய்ச்சல்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார சீர்கேடு காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் பரவி வருகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவி வரும் நிலையில் விழுப்புரத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு டைபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துமனை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
டைபாய்டு காய்ச்சல் பரவுதால் அச்சமடைந்துள்ள விழுப்புரம் மாவட்ட மக்கள் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications