விபத்தில் சிக்கி உயிருக்கு போரடிய இளைஞர்களை காப்பாற்றிய வைகோ
திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தார். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர்.
இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. உடனே காரை நிறுத்திய வைகோ, காரை விட்டு இறங்கி, வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும், மோதிய வேனிலேயே ஏற்றி, முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். கட்சியினர் இருவரையும் உடன் அனுப்பி, தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.
விபத்தில் சிக்கிய இளைஞர்கள் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டைச் சேர்ந்த மருதுபாண்டி,24, முனியாண்டிசாமி,24, என்பவராவர். மதுரைக்கு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வைகோ இளைஞர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications