ரஷ்ய மசூதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு - 8 பேர் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் டாஜெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் ஒரு குண்டுவெடிப்பும் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
டாஜெஸ்தான் பகுதி, வன்முறைக் களமாகும். இந்த வன்முறை குறித்து ரஷ்ய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கசவ்யுர்ட் என்றநகரில் இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த மசூதி ஷியா பிரிவினரின் மசூதியாகும். ரமலான் நோன்புக் காலம் முடிவடைந்து,முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
காயமடைந்தவர்களில் 3 பேருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. மற்றவர்களுக்கு கால், கைகளில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த மசூதியில் ஒரு குண்டும் வெடித்துள்ளது. அதிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் டாஜெஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் சகஜமானதாகும். இங்கு கிட்டத்தட்ட தினசரி குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடும் சகஜமாகி விட்டன. செச்னியாவைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்தான் இந்த வன்முறையில் ஈடுபடுவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் அரசுப் படையினருடன் செச்னியர்கள் 2 பெரிய போர்களை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications