இறக்குமதியில் கெடுபிடி: கையைக் கடிக்கும் சிக்கன் லெக் பீஸ் விலை

இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு கோழிக்கறியில் பிடித்த பாகம் லெக் பீஸ் தான். ஆனால் அமெரிக்கர்களுக்கோ கோழியின் நெஞ்சுப் பகுதி தான் மிகவும் பிடிக்கும். இதனால் அவர்கள் கோழிக்கால்களை சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் சுவையான கோழிக்கால்கள் இந்தியர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் உள்ளூர் கோழிப்பண்ணை வியாபாரத்தை காக்க வெளிநாடுகளில் இருந்து கோழிக்கறி இறக்குமதி செய்ய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதனால் லெக்பீஸ் வாங்க இந்தியர்கள் அதிக அளவு பணம் செலவு செய்கின்றனர். ஒரு கிலோ லெக்பீஸ் ரூ.200க்கு விற்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லெக்பீஸ் இறக்குமதி வரி உள்பட கிலோ ரூ.110க்கு விற்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து லெக்பீஸை இறக்குமதி செய்தால் 45 சதவீதம் பணம் மிச்சமாகும்.
இது குறித்து மெக்டொனால்ட்ஸுக்கு கோழிக்கறி மற்றும் காய்கறி தயாரிப்புகள் சப்ளை செய்யும் விஸ்டா புராஸஸ்ட் புட்ஸ் நிறுவன சிஇஓ புபிந்தர் சிங் கூறுகையில்,
இந்திய சந்தையில் மாற்றம் ஏற்பட்டால் அன்றி சிக்கன் லெக் பீஸுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியது தான். அதே லெக் பீஸை இறக்குமதி செய்தால் விலை குறையும் என்றார்.
பிரேசிலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் கோழிக்கறியை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அமெரிக்காவில் இருந்து கோழிக்கறியை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இந்த 4 ஆண்டு தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து கோழிக்கறி இறக்குமதி செய்ய இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்தியாவில் கோழிப்பண்ணை வியாபாரம் அதீத வளர்ச்சி கண்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications