நான் ஏன் திருமணம் செய்யவில்லை? தொல்.திருமாவளவன் விளக்கம்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 50வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் நடந்தது.
இந்த விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மேம்பாட்டு சங்க தலைவர் ராஜசேகர், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் திருமாவளவனிடம் 519 கிராம் பொற்காசுகள் வழங்கப்பட்டது.
அப்போது தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,
நான் கல்லூரியில் படித்தபோது கொத்தவால்சாவடியில் மூட்டை தூக்கினேன். படித்து முடித்த பிறகு அங்குள்ள கடையில் மாதம் ரூ.200 சம்பளத்துக்கு கணக்குப் பிள்ளையாக வேலை செய்தேன்.
தொழிலாளர்கள் நிலையை நன்கு உணர்ந்ததால் தான் இங்கு நடக்கும் விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். எனக்கு 519 கிராம் பொற்காசுகள் வழங்கி இருக்கிறீர்கள். இந்தக் காசுகள் எனது குடும்பத்துக்குச் செல்லாது. சிறுத்தைகள் இயக்கத்துக்குத் தான் செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு டி.வி. சேனல், பத்திரிக்கை வைத்துள்ளன. அது போல நமக்கும் உருவாக்க வேண்டாமா? அதற்காகத் தான் உங்களிடம் கையேந்தி வந்து இருக்கிறேன்.
கல்லூரி காலத்தில் சக மாணவர்கள் காதலியுடன் கடற்கரையில் சுற்றித் திரிவார்கள். நான் அப்போது கூட ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றித் தான் சிந்தித்தேன். அதனால் தான் திருமணம் செய்ய விரும்பவில்லை. மற்றபடி நான் யாரையும் காதலித்தது இல்லை. காதல் தோல்வி அடையவும் இல்லை. என் உடலில் எந்தக் குறைபாடும் இல்லை.
சென்னை நகரில் எனது 200 பேனர்களைப் போலீசார் அகற்றி உள்ளனர். ஜெயலலிதா அந்த வழியாகச் செல்வார் என்பதால் அவை அகற்றப்பட்டது. என் முகத்தை ஜெயலலிதா பார்த்தது இல்லையா? என்னுடன் கைகுலுக்கவில்லையா? எங்களுக்குச் சீட் வழங்குவதில் மட்டும் அதிமுக, திமுக நட்பாக இருப்பது போலத் தெரிகிறது. அந்த இரு கட்சிகளும் எங்களுக்கு அதிக சீட் தருவதில்லை என்றார்.
-
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications