சென்னை கல்லூரி பேராசிரியையை கடத்திய 3 பேர் சிறையில் அடைப்பு
நாகர்கோவில்: சென்னை கல்லூரி பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் டெபி. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நேற்று திருமண நிச்சயர்த்தம் நடப்பதாக இருந்தது. இதற்காக ஊருக்கு வந்திருந்த டெபி கடந்த 18ம் தேதி மாயமானார். டெபியை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் சிலர் காரில் கடத்திச் சென்று விட்டதாக கில்பர்ட் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷ் குமாரையும், டெபியையும் தேடி வந்தனர். இந்நிலையில் டெபியும், ரமேஷ் குமாரும், மேலும் சிலரும் ஊட்டியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி விரைந்து சென்ற போலீசார் அங்கு டெபியை மீட்டனர். மேலும் ரமேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வினோத், திவாகர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து களியக்காவிளை அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் இன்று களியக்காவிளை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ரமேஷ்குமாரும், அவரது நண்பர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications