பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியான பதிலடி கொடுங்கள்: எம்.பி.க்களை உசுப்பிவிடும் சோனியா

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரண்டு அவைகளையும் முடக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை காங்கிரஸின் இளம் எம்.பிக்களான சந்தீப் தீட்சித், தீபிந்தர், மிர்தா உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, பாரதிய ஜனதாவின் கருத்துகளுக்கு பதில் கருத்துகளைக் கூறாமல் அதிரடி பதிலடியைக் கொடுங்கள் என்று உசுப்பிவிட்டிருக்கிறார் சோனியா.
முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் அமளி பற்றி ஆலோசிக்கப்பட்டது. அரசியல் லாபத்துக்காகவே நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன.












Click it and Unblock the Notifications