தன்னைக் கடித்த நல்ல பாம்பை விரட்டிப் பிடித்து கடித்தே கொன்ற நேபாள விவசாயி

Subscribe to Oneindia Tamil

Cobra
காத்மாண்டு: நேபாளத்தில் தன்னைக் கடித்த நல்ல பாம்பை விவசாயி ஒருவர் கடித்துக் கொன்றுள்ளார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தென்கிழக்கில் 125 கிமீ தொலைவில் உள்ள பர்தங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சல்மோ மியா(55). விவசாயி. அவர் அவர் தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியாவை நல்ல பாம்பு ஒன்று கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பாம்பை துரத்திச் சென்று பிடித்து அது சாகும் வரை கடித்தார்.

அதன் பிறகு வீட்டுக்கு சென்று நடந்ததைக் கூறிய பிறகு அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் குறித்து மியா கூறுகையில்,

நம்மைக் கடித்த பாம்பை அது சாகும்வரை கடித்தால் நமக்கு ஒன்றும் ஆகாது என்று ஒரு பாம்பாட்டி என்னிடம் கூறியிருந்தார். அந்த நல்ல பாம்பு என்னைக் கடித்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. அதைப் பழிவாங்கவே எனது பல்லால் கடித்துக் கொன்றேன் என்றார்.

நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+