காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுங்கள்... பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திற்குத் தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகின்ற காரணத்தால், காவிரி ஆணையத்தை உடனே கூட்டும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் அவசரக் கடிதம் எழுதியிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. முதல்-அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தின்படி பிரதமர் உடனடியாக காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் கேட்டுக் கொள்கிறேன். 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு ஜெயலலிதா எழுதும் இரண்டாவது கடிதம் இது.

முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் காவிரி ஆணையத்தை இதுவரை ஏன் கூட்டவில்லை என்றால், கடந்த காலத்தில் இதே ஜெயலலிதா காவிரி ஆணையத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் தான் என்று கூடச் சொல்லலாம். காவிரி ஆணையத்தைப் பல் இல்லாத ஆணையம், செயல்படாத ஆணையம் என்றெல்லாம் குறிப்பிட்ட ஜெயலலிதா 2002-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ல் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்திலே கலந்து கொண்டார். ஆனால் அங்கே அனைவருடனும் சுமூகமாகப் பேசி சாதுரியமாகத் தண்ணீரைப் பெறுவதற்கான வழிவகை காணாமல், இடையிலே வெளி நடப்பு செய்வதாகக் கூறி விட்டு வெளியே வந்து விட்டார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ தமிழ் நாட்டு விவசாயிகள்தான்!

29.11.2002 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கர்நாடக முதல்-அமைச்சர் முதல் நாளே டெல்லி சென்று விட்டார். ஆனால் காவிரி நீர் தேவைப்பட்ட நமது மாநில முதல் அமைச்சர் கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு டெல்லி பயணத்தையே ரத்து செய்துவிட்டார்.

அதனால் யாருக்கு நட்டம்? முதல் அமைச்சருக்கு அல்ல, நமது மாநில விவசாயிகளுக்குத்தான். மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை; சம்பாவாவது பயிரிடப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+