மீண்டும் பற்றி எரிகிறது அஸ்ஸாம்: 5 பேர் பலி - காலவரையற்ற ஊரடங்கு அமல்
குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலவரப் பலியைச் சேர்த்து இதுவரை அஸ்ஸாம் கலவரத்திற்கு 85 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோக்ரஜார், சிராங், துப்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ பழங்குடியினருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையில் பாதிக்கப்பட்டு 5 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இடையில் சற்று அடங்கி கலவரம் தற்போது சிராங் மாவட்டத்தில் மீண்டும் வெடித்துள்ளது. இன்று அதிகாலையில், பிஜ்னி என்ற இடத்தில் ஐந்து பேர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்டதாக ஐஜி பிஷ்னாய் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications