ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்

Subscribe to Oneindia Tamil

President's Mercdes Benz car
டெல்லி: குடியரசுத் தலைவருக்காக கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தில் வாங்கப்பட்ட மிகவும் ஆடம்பரமான பென்ஸ் கார் பழுதடைந்திருக்கிறதாம். இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாற்றுக் காரைப் பயன்படுத்தி வருகிறார். அதாது அவருக்கு மிகவும் பிடித்தமான அம்பாசடர் காருக்கே அவர் மாறியுள்ளார்.

கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தின்போது இந்த பென்ஸ் கார் வாங்கப்பட்டது. மிகவும் ஆடம்பரமான இந்தக் கார் பெரும் பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கூடியதாகும். இந்தக் காரில்தான் வலம் வந்து கொண்டிருந்தார் பிரதீபா பாட்டீல்.

இந்த நிலையில் இந்தக் கார் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. என்ஜின் அடிக்கடி பிரச்சினை கொடுத்து வந்தது. இதையடுத்து கார் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மாற்றுக் காராக வாங்கப்பட்டுள்ள அம்பாசடர் காரைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தக் காரின் விலை ரூ. 10 லட்சமாகும்.

தற்போது ரிப்பேராகிப் போன பென்ஸ் காரை ஓரம் கட்டி வைத்துள்ளனராம். அதில் என்ன ரிப்பேர் என்று அதைத் தயாரித்த மெர்சிடிஸ் நிறுவனத்துக்கே தெரியவில்லையாம்.

இதில் விசேஷம் என்னவென்றால் பிரணாப் முகர்ஜிக்கு ஆடம்பரக் கார்களையே பிடிக்காது. அவருக்குப் பிடித்த ஒரே கார் மேற்கு வங்கத்தில் பிறந்த அம்பாசடர் கார்தான். கடந்த 2004ம் ஆண்டு பிரணாபுக்கு ஒரு போர்டுஐகான் காரை அவரது மகன் வாங்கிக் கொடுத்தபோதும் கூட அதை அவர் பயன்படுத்தியதே இல்லை, அவரது அலுவலக ஊழியர்கள்தான் அதில் ஏறி போய் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனக்குப் பிடித்த அம்பாசடரே மீண்டும் தன்னைத் தேடி வந்து விட்டதால் பெரும் குஷியாக உள்ளாராம் பிரணாப் முகர்ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+