இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயற்சி: 74 தமிழர்- 24 சிங்களர் கைது

இலங்கையின் மேற்கு சிலாபம் மற்றும் மட்டக்களப்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை நேற்று வழிமறித்து சோதனை நடத்தியது. அதில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொழும்பு, நீர்க்கொழும்பு, சிலாபம், வவுனியா, புத்தளம், கலகமுவ, திருகோணமலை, மூதூர், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 74 தமிழர்கள் மற்றும் 24 சிங்களர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அனைவரையும் கைது செய்து திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவந்த இலங்கை கடற்படை சிஐடி போலீசாரிடம் கூடுதல் விசாரணைக்காக ஒப்படைத்திருக்கிறது.
இலங்கையிலிருந்து தமிழரும் சிங்களரும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வெளியேறி வருவதும் அவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் வழிமறிப்பதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications